டெல்லியில் திறக்கப்படும் அசத்தல் சிக்னேச்சர் பாலம்!

டெல்லியில் திறக்கப்படும் அசத்தல் சிக்னேச்சர் பாலம்!

டெல்லி: கடந்த 14 வருடமாக டெல்லியில் கட்டப்பட்டு வந்த மிக பிரம்மாண்ட சிக்னேச்சர் பாலம் நாளை திறக்கப்பட உள்ளது.

இந்தியா தற்போது கட்டுமான துறையில் பெரிய பாய்ச்சல் காட்டி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் குஜராத்தில் 182 மீட்டர் உயரம் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறக்கப்பட்டது.

இதுதான் உலகிலேயே பெரிய சிலையாகும். இந்த நிலையில் தற்போது டெல்லியில் மிக பிரமாண்டமான பாலம் ஒன்று திறக்கப்பட உள்ளது.

முதல் கேஸ்.. மகன் பட்டாசு வெடித்ததற்கு தந்தை மீது வழக்கு போட்டது டெல்லி போலீஸ்!

இந்த பாலத்திற்கு சிக்னேச்சர் பாலம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது 2004ல் அப்போதைய டெல்லி முதல்வர் ஷீலா தீக்சித் மூலம் அடிக்கல் நாட்டப்பட்டது. 2011 திறக்கப்படுவதாக திட்டமிடப்பட்டு தள்ளி தள்ளிப்போய் இப்போது திறக்கப்பட உள்ளது. நாளை காலை இதற்காக விழா நடக்க உள்ளது.

இது லேசர் ஒளிவிளக்குளின் திருவிழாவுடன் திறக்கப்பட இருக்கிறது. இதுதான் இந்தியாவின் முதல் சமச்சீரற்ற கேபிள்-பாலம் ஆகும். இது ஒரு பக்கத்தில் இருந்து பார்க்க கையெடுத்து வணக்கம் சொல்வதை போலவே இருக்கும். இது இப்போதே மக்களை பெரிய அளவில் கவர ஆரம்பித்து இருக்கிறது.

இந்த பாலத்தின் மீது மிகப்பெரிய டவர் ஒன்று கட்டப்பட்டு இருக்கிறது. இதன் உச்சத்தில் பைபர் கிளாஸ் மூலம் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதன் உயரம் 154 மீட்டர் ஆகும்.இதன் மீது மக்கள் ஏறி டெல்லி அழகை ரசிக்க முடியும். அதேபோல் இந்த பாலத்தின் நீளம் 154 மீட்டர் ஆகும்.

இது மொத்தம் 124 இரும்பு கேபிள்கள் மூலம் தாங்கப்படுகிறது. இதில் 17,300 இரும்பு கம்பிகள், நெட்டுகள், போல்ட்டுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. 6300 டன் வரை இந்த கம்பிகள் தாங்க கூடியது. 460 டன் எடை வரை வாகனங்கள் செல்ல முடியும்.

இது வடக்கு மற்றும் வடகிழக்கு டெல்லியை இணைக்க உள்ளது. யமுனா நதிக்கு மேல் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 வழி பாதை உள்ள பாலம் ஆகும் இது. வெளிப்புற அவுட்டர் ரிங் ரோட்டையும், வாசிராபாத்தையும் இணைக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டு இருக்கிறது.

(தகவல் : ஒன் இந்தியா)